Nambinorai Kappavale Song Lyrics in Tamil

[ad_1]

Nambinorai Kappavale Song Lyrics in Tamil from Sri Bannari Amman Movie. Nambinorai Kappavale Song Lyrics penned in Tamil by Vijaya Rajendar.

பாடல்:நம்பினோரை காப்பவளே
படம்:ஸ்ரீ பண்ணாரி அம்மன்
வருடம்:2002
இசை:T ராஜேந்தர்
வரிகள்:விஜயா T ராஜேந்தர்
பாடகர்:சுஜாதா மோகன்,
T ராஜேந்தர்

Nambinorai Kappavale Lyrics in Tamil

ஆதிசிவன் பாதியடா
அகிலாளும் தேவியடா
பரம்பொருளின் அம்சமடா
பண்ணாரி அம்மனடா

தேவிக்கே கண்காட்டும் வித்தையடா
இது விந்தையிலும் விந்தையடா
ஆத்தா இது என்னமா வேடிக்கை

பண்ணாரியே எங்கள் பராசக்தியே
கண் கண்ட தெய்வம் முன்னே
கண் கட்டு வித்தையது நடப்பது என்ன
ஜீவா சக்தி உன் முன்னே
துர் சக்திகள் துள்ளுவது என்ன
அம்மா அம்மா அம்மா அம்மா

நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி

நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி

ஓம் ஓம் ஓம் ஓம்
மாரியம்மா முத்துமாரியம்மா

வானம் பொழிய வேணும்
பூமி விளைய வேணும் மாரி
முத்துமாரி
நல்லது நடக்க வேணும்
நானிலம் தழைக்க வேணும் மாரி
தங்கமாரி

கடலுக்குள்ளே முத்தெடுத்தா
மாலையாக கட்டிடலாம் மாரி
முத்துமாரி
மனித உடலுக்குள்ளே முத்து வந்தா
எப்படித்தான் தாங்கிடுவ மாரி
இறங்கி வாடி

மண்சோறு உண்ணுகிறோம் மாரி
உன் மனசுந்தான் இறங்களையோ வாடி
வேப்பிலையை மருந்தென்போம் மாரி
உன் வேகம்தான் குறையலையோ வாடி

பம்பை சத்தம் கேட்டுப்புட்டு வாடி
எங்க பாவடை காரியே நீ வாடி
உடுக்கை சத்தம் கேட்டுப்புட்டு வாடி
இந்த உலகாளும் பண்ணாரி வாடி

நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி

தாம் தகிடதாம் தீம் தகிடதீம்
தேவி… மாரி…

அருகம் புல்லுக்கும்
உயிர கொடுத்தவ மாரி
பெரிய மாரி
எருக்கம் பாலிலும்
விஷத்தை முறிச்சவ காளி
திரிசூலி

சமயபுரம் ஆத்தாலே
பெரியபாளையம் பார்த்தாலே மாரி
முத்துமாரி
அங்காள அம்மனே
வெக்காளி அம்மனே வாடி
இறங்கி வாடி

திரு வக்ர காளியம்மா வாடி
உன் உக்ரம் குறையத்தான் வாடி
அக்னி தேவதையே மாரி
நீ அகிலம் காத்திடத்தான் வாடி

பூக்குழியில் இறங்குகிறோம் மாரி
உன் பூ மனசு மலரத்தான் வாடி
பால் குடங்கள் சுமக்கிறோம் மாரி
எங்கள் பாவங்களை மன்னித்திடு மாரி

நம்பினோரை காப்பவளே முத்துமாரி
எங்கள் நம்பிக்கையின் நாயகியே பண்ணாரி
விளையாட்டு குழந்தைகள் முன்னாடி
நீ விளையாட வந்தது என்னாடி

மாரி முத்துமாரி
மனசு இறங்கி வாடி
மாரி முத்துமாரி
மனசு இறங்கி வாடி

ஆங்காரி ஓங்காரி
ஆயிரங்கண் ரீங்காரி
கருமாரி உருமாறி
கண் கண்ட வெக்காளி
சின்னமாரி பெரியமாரி
முத்துமாரி பண்ணாரி
காளியாயி மாரியாயி
மகாமாயி

You may also like...

x