Udukkai Piranthathu Song Lyrics in Tamil

[ad_1]

Udukkai Piranthathu Song Lyrics in Tamil from Padai Veetu Amman Movie. Udukkai Piranthathu Song Lyrics has penned in Tamil by Kalidasan.

Udukkai Piranthathu Lyrics in Tamil

உடுக்கை பிறந்தது
என் ருத்ராட்ச பூமியிலே
பம்பை பிறந்தது
மேல் மலையனூரு கோவிலிலே

சூலம் பிறந்தது
என் சோட்டானி கரையினிலே
வேம்பு பிறந்தது
என் சமயபுரம் சோலையிலே

எழுந்தேன் காளி இன்று
ஏழு வானம் மகிழவே
நடந்தேன் சூலம் கொண்டு
பாவிகளை அழிக்கவே

விண்ணையும் மண்ணையும் காட்டிய
எனது விஸ்வரூபம் இதுதானே

தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம்

ஊராளும் தேவி
உன் வாசல் நாடி
தாயே நீ துணை என்று
வந்தேன் அம்மா
தாயே நீ மனம் இறங்கி
அருள்வாயம்மா

ஆவேச காளி
பூவோடு தாலி
மடிப்பிச்சை உனை கேட்டு
நின்றேனம்மா
மாங்கல்ய பலம் தந்து
காப்பாயம்மா

பாம்பை ஒலிக்க
ஒலிக்க ஒலிக்க
சாம்பலும் அதில்
சொலிக்க சொலிக்க

படைவீட்டு அம்மன்
நான் பவனி வந்தேனே
என் சத்தியம்தான் ஜெயிக்கும்
என்று சொல்ல வந்தேனே

எனது பக்தரை
நீ ஏமாற்றிய பாவமே
அதனால் உன்மீது
அடங்காத கோவமே
இன்னொருத்தி வாழ்வை பறித்த
துரோகம் உனது சாபமே

மீனாட்சி தாயே காமாட்சி மாயே
பூவோடும் பொட்டோடும்
நான் வாழனும்
தீயான உன் உள்ளம் நீராகனும்
அடி தண்ணீரில் மானாய்
தரைமீது மீனாய்
கண்ணீரில் நின்றேன்
காப்பாற்றம்மா

உடுக்கை பிறந்தது
என் ருத்ராட்ச பூமியிலே
பம்பை பிறந்தது
மேல் மலையனூரு கோவிலிலே

கங்கு நெருப்பு
வெடிக்க வெடிக்க
தனலை அள்ளி
தெளிக்க தெளிக்க

அக்கினி மேல் தவம் புரியும்
வெக்காளி நானே
எட்டு ஜோதியிலே தோன்றி வந்த
காளியும் நானே

கடலின் அலையில் நடக்கும்
மாயக்காரி நானடி
உலகின் தலையில் நின்று
நடனம் செய்வேன் பாரடி
அந்தரத்தில் பள்ளி கொண்ட
ஆதி சக்தி நானடி

அம்மா என் தாயே
உன் கோபம் தீர
பூமாரி தீக்கூட
மிதிப்பேன் அம்மா
மண் சோறு விரதத்தை
முடித்தேன் அம்மா

அடி காணிக்கை முடி தந்து
வேப்பஞ்சீலை கட்டி
கண் மூடி அடிபோட்டு
நடந்தேன் அம்மா

உடுக்கை பிறந்தது
என் ருத்ராட்ச பூமியிலே
பம்பை பிறந்தது
மேல் மலையனூரு கோவிலிலே

சூலம் பிறந்தது
என் சோட்டானி கரையினிலே
வேம்பு பிறந்தது
என் சமயபுரம் சோலையிலே

எழுந்தேன் காளி இன்று
ஏழு வானம் மகிழவே
நடந்தேன் சூலம் கொண்டு
பாவிகளை அழிக்கவே

விண்ணையும் மண்ணையும் காட்டிய
எனது விஸ்வரூபம் இதுதானே

தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம்

You may also like...

x